புத்தகங்கள் கிடைக்குமிடம் ஹார்ட்பீட் டிரஸ்ட் 34/2 துக்காப்பேட்டை செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்பு எண் : 9524753459

Saturday, August 9, 2014

சாதிக்கப்பிறந்தவர்கள் - அபிநயா

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்க சமூகத்தின் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க நீங்களும்  உதவலாம்.  சில மாற்றுத்திறனாளிகளின் அனுபவங்கள் .

நடிகை ஜோதிகாவின் வெகு அற்புதமான நடிப்பில் வெளிவந்த படம் மொழி திரைப்படம். அந்த படத்தின் ஜோதிகா நடித்த வாய் பேசாத, காது கேட்காத கதாபாத்திரத்தின் உண்மையான முழு உருவம் நடிகை அபிநயா. வெறும் அபிநயா என்றால் யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது. நாடோடிகள் படப் புகழ் அபிநயா என்றால் அனைவருக்கும் தெரியும்.

மாற்று திறனாளியான இவரின் வளர்ச்சி அபரிமிதமானது. இவரின் தாய் ஹேமலதாவிடம் அபிநயா பற்றி பேச்சு தொடுத்த போது,"அபிநயா மிக அழகாகப் பிறந்ததாலோ என்னவோ, நாளடைவில் அவளைப் பற்றிய குறை எங்களுக்கு பெரிதாகத் தெரியவே இல்லை. அதற்கு ஏற்றால் போல அபிநயாவும் மிகப் புத்திசாலியாகவே இருந்தாள். அபிநயாவின் அப்பா ஆனந்த் தமிழ் தெலுகு திரைத்துறையில் பணியாற்றி வருபவர். அதனால் அவருக்கு அபிநயாவை ஏதாவது ஒரு துறையில் நன்றாக ஆளாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது.

இப்படி அபிநயாவைப் பற்றி நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அபிநயா பத்திரிகைகளில் வரும் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் படங்களை கத்தரித்து எங்கெல்லாம் அவளுக்கு எட்டுகிறதோ, அங்கெல்லாம் ஒட்டி வைக்க ஆரம்பித்தாள். வாஷிங் மெஷின், பிரிட்ஜ், பீரோ என்று எங்கு பார்த்தாலும் ஐஸ்வர்யா ராயின் படங்களாகவே ஒட்டி வைத்து இருந்தாள்.அப்போதுதான் எங்களுக்குள் ஒரு பொறி பறக்க ஆரம்பித்தது. இவளுக்கு ஐஸ்வர்யா ராயின் மாடலிங் வீடியோக்களை போட்டுப் பார்த்து காண்பித்து, மாடலிங்கின் மேல் இவளுக்கு ஒரு ஆர்வத்தை உண்டாக்கினோம்.

அபிநயா சிறு குழந்தையாக இருக்கும் போதே, ஐஸ்வர்யா ராயின் படங்கள், புகைப்படங்கள் வீடியோ என்று எதைப்பார்த்தாலும் அப்படியே போட்ட வேலைகளை போட்டபடி உட்கார்ந்து விடுவாள். அவள் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி இருக்கும். இதை அடிப்படையாக வைத்துத்தான் அவளை மாடலிங்கில் அறிமுகப் படுத்தினோம். பிறகு இயக்குனர் சமுத்திரக் கனியின் நாடோடிகள் படத்தில் அறிமுகமாகி இப்போது வரிசையாகப் படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டாள்.இப்போது இயரிங் எய்ட் உதவியுடன் நன்றாக பேசவும் கற்றுக் கொள்கிறாள். படவிழா மற்றும் திரைத்துறை சம்பந்தமான எந்த விழாவாக இருந்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அவளுக்கு டான்ஸ் ஆடுவது என்றால் மிகவும் பிடிக்கும், நடிகர் லாரன்ஸுடன் பல மேடைகளில் டான்ஸ் ஆடியிருக்கிறாள்.

மாற்றுத் திறனாளிகள் சந்தித்து வரும் சவால்கள் என்றால், என்னைப் பொருத்தவரை சமுதாயத்தில் அவர்களின் தன்னம்பிக்கை வளரும் விதமான தூண்டுதல்கள் இல்லை என்பதுதான். பெரும்பாலான வீடுகளில் கூட பல மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னம்பிக்கைத் தூண்டுதல்கள் குறைவாக ஏன், முற்றாக இல்லை என்றே சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை இதுபோல மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளாக இருக்கும் போதிலிருந்தே அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, அவர்கள் கூடவே இருந்து அவர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடவேண்டும் என்பதுதான்.

நாம் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அப்படி துணை இருந்தோம் என்றால், அவர்களை சமூகத்தில் நல்ல விதத்தில் மேம்படுத்திப் பார்க்க முடியும். பெற்றோர்களில் ஒருவர் இப்படிப்பட்ட குழந்தைகளை மேம்படுத்தி ஆளாக்கினால், பிற்காலத்தில் மாற்றுத் திறனாளிகளை பெற்றவர்கள் பெருமை அடைய முடியும். தவிர பிற்காலத்தில் அவர்கள் உங்களை உட்காரவைத்து சாப்பாடு போடுவார்கள் என்பது உறுதி" என்கிறார்.

No comments:

Post a Comment