புத்தகங்கள் கிடைக்குமிடம் ஹார்ட்பீட் டிரஸ்ட் 34/2 துக்காப்பேட்டை செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்பு எண் : 9524753459

Wednesday, September 7, 2016

யூதர்களின் டோரா - எழுதியவர். திரு.செல்வன்

நெட்பிளிக்ஸில் பைபிள் பற்றிய டிவி தொடரை பார்த்து வருகிறேன். 

பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என பைபிளில் இருவகைகள் உண்டு. ஆனால் இது கிறிஸ்துவர்களுக்கு மட்டும் தான். யூத மதத்தில் பழைய ஏற்பாடு என நாம் அறியும் நூலை டோரா என அழைப்பார்கள். ஏசு இறைதூதர்/கடவுளின் மகன் என யூதர்கள் ஒப்புகொள்வதில்லை. அதனால் புதிய ஏற்பாடு என நாம் அழைக்கும் நூலையும் அவர்கள் ஒப்புகொள்வதில்லை. அதனால் டோரா இரு மதங்களுக்கும் பொதுவானது. 

டோராவில் யூத இனத்தின் வரலாறு விவரிக்கபடுகிறது. செங்கடல் பிளப்பது, பாபெல் கோபுரம் கட்டி மொழிகள் தோன்றுவது, போன்ற அறிவியலால் விளக்கமுடியாத கருத்துக்கள் டோராவில் உண்டு. அதே சமயம் அதில் உள்ள பல சம்பவங்கள் வரலாற்று ரீதியானவை என்பதும் மறுக்கவியலாது.

Tuesday, December 8, 2015

வெளிச்சம் வரவேற்கிறது - வையவன்




“அந்த ஆர்டிஸ்ட் பேஷண்டுக்கு என்னிக்கு டிஸ்சார்ஜ்?” டாக்டர் சுரேஷ் கேட்டார்.
பேண்டேஜ் அவக்கணும். விக்னேஷை நெருங்கி நின்றிருந்த சுஷ்மிதா சற்று வலிகினாள்.
லிஃப்ட் மெதுவாக உறுமியவாறே உயர்ந்துகொண்டிருந்தது.
முதல் தளம் நெருங்கிக்கொண்டிருந்தது.
அதிசயமாக லிஃப்டில் அவரையும் அவளையும் தவிர வேறு யாரும் இல்லை.
“என்னிக்கு?”
“போயிண்டிருக்கேன்”
“இன்னிக்கு மார்னிங்”
தலை உலுக்கினாள்.

Saturday, December 5, 2015

மழைவெள்ளத்தை மனிதத்தால் துடைத்தெடுப்போம்

கருநாடகா ஐந்து கோடி, பீகார் ஐந்து கோடி, மோடி ஆயிரம் கோடி, நம்ம விஜய் ஐந்து கோடி, லாரன்ஸ் ஒரு கோடி, ஆர் ஜே பாலாஜி ஒரு கோடி, தெலுங்கு நடிகர்கள் பலர் லட்ச லட்சமென ஒன்றுகூடி கோடியை நோக்கிச் செல்கின்றனர்.

அஜித் சந்தானம் பிரபாஸ் வரிசையில் மம்முட்டி ஒரு பட்டியலையிட்டு தன் மனக்கதவோடு பல இருப்பிடங்களை சென்னையில் திறந்துவிட்டிருக்கிறார். சத்தியம் திரையரங்கம் மற்றும் சில கல்லூரிகளும் திருமண மண்டபங்களும் பொதுநல அமைப்புகளும் அவசர உதவிக்கு மனிதாபிமானத்துதோடு தன் வாசலைத் திறந்து உறங்க இடமும் உண்ண உணவையும் தந்திருக்கிறது.

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1

Inline image 2

கி.பி. [1044  - 1123]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1
பாரசீக மூலம் :  உமர் கயாம் ​ரூ​பை​யாத் 
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

++++++



உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;

 கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற'ருபியாத்' என்னும் ஈரடிப் 
 பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழிபெயர்ப்பாகி உள்ளன.ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார்.

மனம் ஒரு மகாசமுத்திரம்


அது ஒரு மாலை நேரம். சூரிய கோளம் செம்பரிதியாகி மேற்குத் திசையில் சிறுகச் சிறுக அமிழ்கிறது. விடை பெறுவது மாதிரி, அவள் எருமைகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவளை எனக்குத் தெரியும். ஒரு சமீபத்திய மணமகள். அவள் சிரிக்கும்போது தான் அவள் எவ்வளவு கறுப்பு என்று தெரியும். எப்போது சிரித்தாலும் அவள் கண்கள் இணைந்து சிரிக்கும். அதுதானே நிஜமான சிரிப்பு கூட ஒரு சோகமும் உண்டு. பளீரென்று எரியும் தீபத்தின் கீழே, அதைத் தாங்கும் பீடத்தின் பக்கத்தில் அதன் நிழல் படிவது மாதிரி.

அவள் வரும் பாதையில் நிழல்கள் மறைந்துவிட்டன. அந்தி வேளை. கருவேலங்காடு மாதிரி, ஏரியில் நட்ட மரங்கள். அங்கங்கே குட்டையில் நீர் தேங்கி, நீலமான வானவெளியை, நீர்க்கோலப் பூச்சி போடும் வட்டங்களில் நெளியும் திரையாகப் பிரதிபலிக்கிறது. சிள்வண்டுகள் தங்கள் ராக்காலப் பாராயணத்தைத் தொடங்கி இருந்தன. எப்போதோ பறக்கும் காகத்தின் குரல் கேட்டு அவை திடுக்குற்று ஒரு கணம் மௌனமாயின. மீண்டும் தொடர்ந்தன.

மழை ஓய்ந்தப்பின் மாற்றங்கள் வேண்டும்

இயற்கையின் சீற்றத்தை இயற்கையே மாற்றிக்கொள்ளும். என்றாலும் இழப்பு இழப்புதான் என்பதில் எல்லோருக்குமே வருத்தமுண்டு. ஆனால் ஒரு மரத்தை பிடுங்கியதன் கோபம் கூட இந்த மழைக்கு உண்டெனில் அதன் கோபமும் நியாயம்தானே? அப்போ நம் நிலை? நம் நிலையென்ன, நம் நிலை இனி இயற்க்கைக்கு ஒத்தாற்போல மாறவேண்டும். ஒரு மரம் பிடுங்கினால் இரண்டு மரத்தை நடும் தர்மம் நம் வாழ்க்கையோடு நமக்கு வசப்படவேண்டும்.

இம்முறை மழை நமக்குக் கற்றுத்தந்த பாடத்தைக் கொஞ்சம் நாமும் நினைவில் கொண்டு, மழைநீர் சேமிப்புத் திட்டம்போல, இனி மழைக்கால பாதுகாப்பு திட்டங்களையும் வெகுவாகக் கற்றுக்கொள்ளல்வேண்டும். முற்றிலும் சரிக்கு ஈடாக பல முன்கூட்டிய அறிவுசார் திட்டங்களை வகுத்துக்கொள்ளவேண்டும். ஏரி குளம் ஆறு என தக்கவாறு அமைத்துக்கொள்வதும், தூர்வாரி நீர்நிலைகளை சீர்செய்துக் கொள்வதுமாய் இனி மழை குறித்தும் புயல் குறித்தும் ஒவ்வொரு காலநிலை குறித்தும் முன்னாட்களைப்போலவே நாம் கூடுதல் கவனமாகவே இருத்தல் வேண்டும்.

இங்கே அந்தளவு மழை வராதுதான் என்றாலும், வந்துவிட்டால் எனும் கேள்வி இனி நமக்குள் எப்போதும் இருக்கும்தான் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் கால ஓட்டத்தில் இதையும் கடந்துபோய் அடுத்துவரும் தலைமுறைக்கு மீண்டும் இச்சிக்கலை நாம் விட்டுச்செல்வோமெனில் பின் நாமும் குற்றவாளிகளே.
வாழ்க்கை என்பது வெவ்வேறு. அவரவர் சுற்றம் சூழல் மனிதர்கள் எண்ணம் என அவரவருக்கு மாறுபடுவது. ஆனால் நாம் வாழுமிந்த இயற்கைச் சூழல் எல்லோருக்கும் ஒன்றுதான். அது எல்லாம் வல்லது. வீரியம் மிக்கது, அதை எதிர்ப்பதைக் காட்டிலும் அதோடு சேர்ந்து வாழப் பழகிக் கொண்டால். வீட்டை எரிக்கும் அதே நெருப்பு வீட்டிற்கு விளக்காயும் இருப்பதைப்போல; தலைமூழ்கி உயிரை வாங்கும் அதே தண்ணீர் உயிராகி நம்முள் ஊறியும் கிடக்கும்..
மாற்றம் இயற்கையின் இன்னொரு பங்காக வாழும் நம்மிடமே இன்னும் நிறைய தேவை. அத் தேவைக்குச் சிந்திப்போம். மெல்ல மெல்ல அது புரிகையில் இயற்க்கை நிச்சயம் நம் நலத்திற்கு வேண்டியும் அதுவே தானாக இயங்கிக்கொள்ளும்.
அதன்பொருட்டு; நலம்சூழ்ந்த வாழ்வும் வளமுறும் சுற்றமும் எல்லோருக்கும் வாய்க்குமாகலாம்.. எல்லோருக்கும் வாய்க்க வாழ்த்து!!
-- 
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்: 
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழைமாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

மாறிச்செல்லும் மாற்றங்கள்

......பேருந்து நெருக்கடிகளிடையே என் மூன்றுச் சக்கர வாகனத்தைக் காக்கவென அநேக தேவ தூதர்கள் இருக்கிறார்கள் என்று நான்எண்ணிக் கொள்வதுண்டு.