புத்தகங்கள் கிடைக்குமிடம் ஹார்ட்பீட் டிரஸ்ட் 34/2 துக்காப்பேட்டை செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்பு எண் : 9524753459

Saturday, August 30, 2014

உலக மயமாக்கல்!


விற்றே வாங்கலாம்
விற்க வந்தான் பரதேசி
விலை பேசினான் சுதேசி
படிந்தது பேரம்
கைமாறியது தேசம்


தலைமுறைகள் கழித்து
கண்ணீர் சிந்திக்
குண்டடிப் பட்டு
சிறையில் அடைந்து

கொடிகள் தூக்கி
உப்புக் காய்ச்சிப் போராடி
மீண்டும் நடந்தது
கைமாற்றம்

ஏன் சிரமமென்று
விற்றே வாங்கிட வந்திருக்கிறது
தற்போதிங்கு
உலக மயமாக்கல்

காகிதக் கப்பல்களும் கனவு தீவுகளும் கவிதைத் தொகுதியிலிருந்து
ஆக்கம் : வையவன்.

No comments:

Post a Comment