புத்தகங்கள் கிடைக்குமிடம் ஹார்ட்பீட் டிரஸ்ட் 34/2 துக்காப்பேட்டை செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்பு எண் : 9524753459

Monday, November 30, 2015

இந்தியாவின் முதல் பத்திரிகைத்துறைப் பெண் புகைப்படக்காரர்



சில விடயங்கள் மனதிற்கு பிரியமானவை. அவ்வாறே பிரியமான தொழிலைத் தேர்ந்ததெடுப்பதும் முழு ஈடுபாட்டோடு செய்வதும் ஒரு வாழ்வியல். ஹோமி வியர்வலா 1933 லேயே நேரம், காலம் தங்கும் இட வசதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஆபத்தான சூழ்நிலைகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஆபத்தான சூழ்நிலைகளிலும் பணியாற்ற வேண்டிய பத்திரிகை புகைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்தார்.
பதிமூன்று வயது மாணவியாக அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு பிக்னிக்கின் போது எடுத்த படங்களைப் பாராட்டி வகுப்பு ஆசிரியர் "பாம்பே கிரானிக்கல்" படங்களை அனுப்பிய போது, அத்தனையும் பிரசுரமாகி சன்மானம் அனுப்பப்பட்டது.  பின்னர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர், கற்பனைக்கும், சிருஷ்டி தரும் மகிழ்ச்சிக்கும் வாய்ப்பளிக்கும் புகைப்படத்துறையே  தேர்ந்தெடுத்தார்.
1940 களில் அன்றைய பெரிய கருவிகளைச் சுமந்து கொண்டு மிதிவண்டியில் சுற்றி அவர் படங்களை எடுத்தது பலருக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால், "இல்லஸ் டிரேட் வீக்லி", "ஆன்லுக்கர்", "டைம்", "லைஃப்" போன்ற பத்திரிகைகள் அவற்றை விரும்பிப் பிரசுரித்தன. எலிசபெத் அரசி, கென்னடி போன்ற பல பிரமுகர்களின் வருகை, நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்று நிகழ்வு, கும்பமேளா காட்சிகள் எனப் பலகோணங்களில் அவருடைய ஆல்பம் நாட்டின் 50 ஆண்டுகால வாழ்வியல் சரித்திரத்தின் கண்ணாடியாக விளங்குகிறது.
எந்த முக்கிய நிகழ்ச்சியானாலும் அழைப்பு வந்தால் மட்டுமே போவது என்பதை அவர் ஒரு தன்மானக் கொள்கையாகவே வைத்திருந்தார். 1970 க்குப் பின் புகைப்படக்காரர்கள் முட்டி மோதியும், விரட்டப்பட்டும் பணியாற்ற வேண்டியிருப்பது கண்டு மனம் வெதும்பி ஓய்வு பெற்றார். 

No comments:

Post a Comment