புத்தகங்கள் கிடைக்குமிடம் ஹார்ட்பீட் டிரஸ்ட் 34/2 துக்காப்பேட்டை செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்பு எண் : 9524753459

Saturday, December 5, 2015

மாறிச்செல்லும் மாற்றங்கள்

......பேருந்து நெருக்கடிகளிடையே என் மூன்றுச் சக்கர வாகனத்தைக் காக்கவென அநேக தேவ தூதர்கள் இருக்கிறார்கள் என்று நான்எண்ணிக் கொள்வதுண்டு.  


சில நேரம் பல பிள்ளையார்களும் வருவதுண்டு துணைக்கென்று. நண்பர் ஒருவர் இயேசு கிறிஸ்துவிடம் கனிந்து மனதுருகி பிரார்த்தனை செய் என்றார். 

இங்கு பிரார்த்திக்க என்ன இருக்கிறது? கடவுளோடு கோபித்துக் கொண்ட நாட்கள் பல உண்டு. அது மழலைப் பருவத்தின் நிகழ்வுகள். பிணக்கு என்று சொல்லிக் கொள்ளலாம். 

பிரியமாய் சிணுங்கி தன் உரிமையைக் கேட்கும் குழந்தையைப் போல,அதனால் ஏற்பட்ட உண்ணா விரதங்கள். அழுகைகள். இது வேண்டும் என்றோ அது வேண்டாம் என்றோ எதையும் எண்ணிக் கொள்ளவில்லை. 

அல்லது எனக்கு அறிமுகப்படுத்தப் பட்ட கடவுளிடம், இதை எனக்கு தந்தால் உன்னை நேசிப்பேன்,வணங்குவேன் என்ற நிபந்தனைகளும் இல்லை. நான் உன்னை வணங்க வேண்டிய அவசியமில்லை. 

பிரார்த்திக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனக்குத்தேவையானதை நீ செய்து தரக் கடமைப் பட்டிருக்கிறாய். ஏனென்றால் உன்னால் நான் படைக்கப்பட்டிருக்கிறேன். 

விலை ரூ.100=00

No comments:

Post a Comment