புத்தகங்கள் கிடைக்குமிடம் ஹார்ட்பீட் டிரஸ்ட் 34/2 துக்காப்பேட்டை செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்பு எண் : 9524753459

Saturday, December 5, 2015

மழைவெள்ளத்தை மனிதத்தால் துடைத்தெடுப்போம்

கருநாடகா ஐந்து கோடி, பீகார் ஐந்து கோடி, மோடி ஆயிரம் கோடி, நம்ம விஜய் ஐந்து கோடி, லாரன்ஸ் ஒரு கோடி, ஆர் ஜே பாலாஜி ஒரு கோடி, தெலுங்கு நடிகர்கள் பலர் லட்ச லட்சமென ஒன்றுகூடி கோடியை நோக்கிச் செல்கின்றனர்.

அஜித் சந்தானம் பிரபாஸ் வரிசையில் மம்முட்டி ஒரு பட்டியலையிட்டு தன் மனக்கதவோடு பல இருப்பிடங்களை சென்னையில் திறந்துவிட்டிருக்கிறார். சத்தியம் திரையரங்கம் மற்றும் சில கல்லூரிகளும் திருமண மண்டபங்களும் பொதுநல அமைப்புகளும் அவசர உதவிக்கு மனிதாபிமானத்துதோடு தன் வாசலைத் திறந்து உறங்க இடமும் உண்ண உணவையும் தந்திருக்கிறது.


என்றாலும், சென்னையின் நன்றிக்குறிய நிறையக் கோடிகளைக் கேட்டு கையேந்தி நிற்கிறது வீடுதோறும் தேங்கிய மழைநீரும் இனி வரவிருக்கும் மழைத்தொற்று நோய்களும்..
உதவி என்பது உயிர்க்கேட்டு நிற்கும் இவ்வேளையில் எங்கே போனார்கள் நம் அரசியல், திரைத்துறை, மருத்துவம், வியாபாரம் மற்றும் இதர பல தொழில்சார்ந்த ஜாம்பவான்களெல்லாம் ?

வெளியே வாருங்கள். வெட்கமின்றி வெளியே வாருங்கள். பணமுள்ளோரே; உதவிசெய்வதற்கு நெஞ்சுரமேன்? நெஞ்சிலீரம் உண்டென்றுக் காட்ட தயங்காது வந்துவிடுங்கள். நாளைக்கே மழை நினைத்தால் உங்களையும் மூழ்கடிக்கலாம்.

சென்னையே மிதக்கிறதெனில் நாமெல்லாம் எவ்வளவு..?

இருப்போர் இல்லார்க்குக் கொடுத்து உதவாததைவிட பச்சைதுரோகம் உலகிலறிய வேறில்லை..
உண்மையில்; இளைஞர்களும், நினைத்ததுமெடுத்துக் கொடுத்துவிட இயலாதோறும் தெருவில் இறங்கி இரைஞ்சும் மனநிலை பணமிருப்போருக்கெல்லாம் இம்மியளவு இருந்துவிட்டால் போதும்; இயற்கையின் இப்பேரிடரை நாம் நம் மனிதத்தால் இலகுவாக கடந்துவிடலாம்..
மனிதம் கொள்ளுங்கள். பணமிருப்போரே மனிதத்தோடு சிந்தியுங்கள். பணத்தை உதவிக்கு விதைத்துச்செல்லுங்கள், நாளை பணம் இரட்டிப்பாய் விளையும் நம்புங்கள்!!
-- 
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்: 
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழைமாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

No comments:

Post a Comment