புத்தகங்கள் கிடைக்குமிடம் ஹார்ட்பீட் டிரஸ்ட் 34/2 துக்காப்பேட்டை செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்பு எண் : 9524753459

Tuesday, December 8, 2015

வெளிச்சம் வரவேற்கிறது - வையவன்




“அந்த ஆர்டிஸ்ட் பேஷண்டுக்கு என்னிக்கு டிஸ்சார்ஜ்?” டாக்டர் சுரேஷ் கேட்டார்.
பேண்டேஜ் அவக்கணும். விக்னேஷை நெருங்கி நின்றிருந்த சுஷ்மிதா சற்று வலிகினாள்.
லிஃப்ட் மெதுவாக உறுமியவாறே உயர்ந்துகொண்டிருந்தது.
முதல் தளம் நெருங்கிக்கொண்டிருந்தது.
அதிசயமாக லிஃப்டில் அவரையும் அவளையும் தவிர வேறு யாரும் இல்லை.
“என்னிக்கு?”
“போயிண்டிருக்கேன்”
“இன்னிக்கு மார்னிங்”
தலை உலுக்கினாள்.

டாக்டரின் பார்வை தன் உதடுகள் மேல் பதிவதை உணர்ந்தாள். லிப்ஸ்டிக் போட்டிருக்க வேண்டாம். அதுவும் இந்த ரத்தச்சிவப்பு கலரை. பாரீஸில் இருந்து ஆசை ஆசையாக அக்கா திலீபா வாங்கி வந்திருந்தாள். மறுக் மறுக்க அவளே தடவி விட்டாள். கூசிக் குறுகிக் குன்றிப்போனாள். இப்போது உதடுகள் காட்சிப் பொருளாவது கூச்சமாக இருந்தது.
உள்வாங்கி மடித்துக்கொண்டாள். சட்டென்று ஒரு விலக்கம் உணர்ந்து சுரேஷின் பார்வை பக்கமாக விலகியது.
“புவர் மேன். பொறந்ததுலேர்ந்து வெளிச்சத்தைப் பார்க்காதவன். இன்னிக்கு முதல் முதலா வெளிச்சத்தைப் பார்க்கப் போறான்.”
சுரேஷின் மனசிற்குள் வேறு டயலாக் ஓடியது ‘உன் அழகான முகத்தை… உன் செக்கச்செவேர் உதடுகளை…’
“அவன்தான் வெளிச்சத்தைப் பார்க்கலியே ஒழிய வெளிச்சம் அவனைப் பார்த்துண்டே இருக்கு…”
டாக்டரின் புருவங்கள் கேள்விக்குறி போல் உயர்ந்தன. லிஃப்ட் முதல் தளத்தை அநேகமாக நெருங்கிவிட்டது.
“அவன் வரைந்த பெயிண்டிங் லலித் கலா அகாடெமி மூலமா வியென்னா போயிட்டுது. ஏகப்பட்ட ரிசெப்ஷனாம். ஒரு பிறவிக்குரடன் வரைஞ்ச பெயிண்டிங்னு ஒரே பாராட்டாம்.”
அதைச் சொல்லும்போது சுஷ்மிதா குரலில் இருந்த அட்மிரேஷன் கொஞ்சம் ஓவராகப் பட்டது. பொறாமையாகக் கூட இருந்தது.
முதல் தளத்தில் லிஃப்ட் நின்று கதவு திறந்தது. இருபத்தைந்து வயது இளைஞன் ஒருவன் – கையல் ஒரு ப்ரீப்கேஸ், தோளில் ஒரு வீடியோ கேமரா, கழுத்தில் பி.பி.சி என்று அடையாளம் பதித்த ஐடி கார்ட்டு கட்டிய சிமெண்ட் கலர் கயிறு.
“மீடியாவா?” சுரேஷ் கேட்டார்
“ஆமாம்” என்று மிடுக்காகத் தலையாட்டினான் வந்தவன்.
லிஃப்ட் மேலேறியது.
“எனி கவரேஜ்?”
நோ. ஒரு இண்டர்வியூ. வார்ட்டு நம்பர் ஃபோர். ஒரு பிறவிக்குருடன். பட் எ க்ரேட் ஆர்டிஸ்ட்” மீடியா சொன்னது.
“பேரு? டாக்டர் துழாவினார்.
“எத்திராஜா?” சுஷ்மிதா வாய் திறந்தாள். அவள் முகத்தின் பிரகாசம் டாக்டர் சுரேஷை மேலும் சங்கடப்படுத்திற்று.
“எஸ். பத்திரிகையிலே யாரோ ஒருத்தர் அவரோட விரல்களே கண்ணா மாரி ஸ்ட்ரோக்ஸ் கொடுக்குதுன்னு பாராட்டி இருந்தார்.”
“அவரை இண்டர்வ்யூ எடுக்கப்போரீங்களா?”
“இல்லே”
“தென்?”
“அவர் ஒரு மார்வெலஸ் சிங்கர். பிபிசி அவரைப் பாடச் சொல்லி ரெகார்ட் பண்ணப்போகுது. அதுக்கு இன்னிக்கு அவரை ஒரு ரிகர்சலுக்குக் கூட்டிட்டுப் போகணும்”.
சுஷ்மிதா குறுக்கிட்டாள்.
“இன்னிக்கு அவரை கூட்டிட்டுப் போக முடியாது.”
“ஒய்?”
“அவரோட ஆபரேஷன் முடிஞ்சு கண் கட்டு அவுக்கப்போறோம்.”
லிஃப்ட் இரண்டாவது தளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
“தென் ஓ.கே! ஜஸ்ட் விஷயம் சொல்லி அப்பாயின்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிக்கிறேன்.”
டாக்டர் குறுக்கிட்டார்.
“எண்ட்ரி பாஸ் இருக்கா?”
“நான் மீடியா.”
“ஸாரி, யாரா இருந்தாலும் எண்ட்ரி பாஸ் வேணும்”.
“எங்கே வாங்கணும்?”
“கிரௌண்ட ஃப்ளோர். எறங்கி எதிர் லிஃப்டிலே போங்க.”
இரண்டாம் தளத்தில் லிஃப்ட் நின்றது.
“ஸீ யூசார்!”
மீடியா இறங்கிக் கொண்டது.
அவர் இறங்கியதும் “ஹி கான்ட் ஸீ யூ” சுரேஷ் மனசு குதர்க்கம் பேசியது.
லிஃப்ட் புறப்படும் நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க வார்டு நம்பர் நாலின் ஸ்வீப்பர்பெண்மணி உள்ளே வந்தாள். நாற்பது கடந்த வயது. பாசம் சிந்தும் கண்கள்.
“என்ன மீனா இவ்வளவு டென்ஷனா வர்றே?”
அவள் அதற்குப் பதில் சொல்லவில்லை பதைபதைப்பாகக் கேள்வி கேட்டாள்.
“அந்த படம் போடறவரு கண்கட்டை அவுத்திட்டீங்களா நர்சம்மா?”
“இல்லே, இனிமே தான்.”
மீனா கண்மூடிக் கைகூப்பி லிப்டின் உச்சிக்கு மேல் வானவெளியில் வீற்றிருந்த முகம் தெரியாத சக்திக்கு ஒரு சமஸ்காரம் செய்தாள்.
“என்ன மீனா?” நர்ஸ் கேட்டாள்.
“எல்லாம் நல்லபடியாக நடந்து ஆபரேஷன் நல்லா முடிஞ்சா கீழே அம்மனுக்கு வெள்ளிக்கண் சாத்தறதா வேண்டிக்கிட்டேன். முடிஞ்சது. சாத்திட்டு தோ… ஓடிவரேன். அந்தப்புள்ளே தனக்குப் பார்வை வந்ததும்  மொதெமொதல்லே என் முகத்திலேதான் முழிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தது. அதான் ஓடிவரேன்.”
சுரேஷ் சுஷ்மிதா முகத்தைப் பார்த்தார்.
மூன்றாவது தளம் வந்தது. நர்ஸ் சுஷ்மிதாவிடம் கையசைத்துவிட்டு சுரேஷ் இறங்கிப் போய்விட்டார். லிஃப்ட் மேலேறியது.
“மீனா… அந்த ஆள் முகம் எப்படி இருக்குன்னு நீ எப்பவாவது அவர் கிட்டே சொல்லி இருக்கியா?”
“வம்பா?
உன் முகம் பூரா அம்மைத் தழும்பு போட்டு கோரமா இருக்குன்னு யாராவது சொல்வாங்களா?”
“இப்போ கட்டை அவுத்துத் தன்னோட முகத்தைக் கண்ணாடிலே அந்த ஆள் பார்த்தா எவ்வளவு கஷ்டப்படுவார்?”
“சொல்றதுக்கே இல்லேம்மா. ஆபரேஷனே பண்ணாம குருடாவே இருந்திருக்கலாமேன்னு ரொம்ப பேஜாராயிடுவார். பாவம் புள்ளே. நல்லா பாடுது. நல்லா படம் போடது. பகவான் இப்படி ஒரு கொறைய வச்சுட்டானே!”
அவர்கள் இருவரும் வார்டு நம்பர் நான்கை நெருங்கும்போது இரண்ட கைகளையும் கோட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு டியூட்டி டாக்டர் வெளியே நின்றிருந்தார்.
“நோ யூஸ்… சுஷ்மிதா… தி பேஷண்ட இஸ் கான்.”
“என்ன டாக்டர்?”
“எஸ் ஹி இஸ் டெட்”
“யாரோ அவன் முகம் ரொம்ப விகாரமா இருக்குன்னு சொல்லியிருக்காங்க சூசைட் பண்ணிட்டான்”.
“எப்படி டாக்டர்?”
“கைப்பிடிச்சுவர்லேருந்து கீழே குதிச்சிட்டான்… ஜஸ்ட் நௌ.”
மீனாதான் உரக்கக் கத்தினாள்.
வெகுநேரம் விம்மி விம்மி அவள் அழும் குரல் வார்டு நம்பர் நான்கில் கேட்டுக் கொண்டே இருந்தது.

No comments:

Post a Comment