நெட்பிளிக்ஸில் பைபிள் பற்றிய டிவி தொடரை பார்த்து வருகிறேன்.
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என பைபிளில் இருவகைகள் உண்டு. ஆனால் இது கிறிஸ்துவர்களுக்கு மட்டும் தான். யூத மதத்தில் பழைய ஏற்பாடு என நாம் அறியும் நூலை டோரா என அழைப்பார்கள்.
ஏசு இறைதூதர்/கடவுளின் மகன் என யூதர்கள் ஒப்புகொள்வதில்லை. அதனால் புதிய ஏற்பாடு என நாம் அழைக்கும் நூலையும் அவர்கள் ஒப்புகொள்வதில்லை. அதனால் டோரா இரு மதங்களுக்கும் பொதுவானது.
டோராவில் யூத இனத்தின் வரலாறு விவரிக்கபடுகிறது. செங்கடல் பிளப்பது, பாபெல் கோபுரம் கட்டி மொழிகள் தோன்றுவது, போன்ற அறிவியலால் விளக்கமுடியாத கருத்துக்கள் டோராவில் உண்டு. அதே சமயம் அதில் உள்ள பல சம்பவங்கள் வரலாற்று ரீதியானவை என்பதும் மறுக்கவியலாது.
ஆதாம்- ஏவாள் மூலம் மனித இனம் தோன்றியது என யூதர்கள் நம்புகின்றனர்.
ஏடன் தோட்டம் இருப்பது பாரசிகம் என கூறும் சில டாக்குமெண்டரிகளை கண்டேன். பாபெல் கோபுரத்தின் கதை சுவாரசியமானது. மனிதர்கள் கடவுளை அடைய மிகப்பெரும் கோபுரத்தை கட்டி விண்ணில் ஏற முயல்கின்றனர். கடவுள் அதை தடுத்து நிறுத்த ஒரே மொழி பேசிய மக்களை பல மொழிகளை பேசுபவர்களாக மாற்றுகிறார். அதில் குழப்பம் வந்து பாபெல் கோபுரம் கைவிடபடுகிறது. இவை எல்லாம் வரலாற்று காலகட்டத்துக்கு முன் நிகழ்வதாக கூறபடுவதால் அதை உறுதிபடுத்த முடிவதில்லை.இதனால் ஆபிரகாமுக்கு முந்தைய காலகட்டத்தை pre-historic period (புராணகாலம்) என பிரிக்கலாம்
இஸ்ரேலிய நிலப்பகுதியில் யூதர்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலகட்டத்தில் ஆப்ரஹாம் எனும் ஒரு தலைவர் தோன்றுகிறார். அவருக்கு இரு மனைவிகள், இரு மனைவிகள் மூலம் இரு குழந்தைகள். இரண்டாம் மனைவி ஹாகருக்கும் ஆப்ரகாமுக்கும் பிறந்தவர் இஸ்மாயில். முதல் மனைவி சாராவுக்கு வயதான காலத்தில் பிறந்தவர் ஐசக்.
மனைவியருக்கு இடையே நிகழ்ந்த சண்டையில் ஆப்ரஹாம் சாரா பக்கம் சாய்கிறார். இஸ்மாயிலும்,
ஹாகரும் வீட்டை விட்டு பிரிகின்றனர். இதில் இஸ்மாயிலின் வம்சாவழியினர் இன்றைய அரபிகள். ஐஸக்கின் வம்சாவழியினர் யூதர்கள்.
ஆப்ரகாம் காலகட்டம் வரை யூதர்கள் இஸ்ரேல் பகுதியில் நாடோடிகளாக இருந்திருக்க்லாம். ஏனெனில் அன்று அவர்களுக்கு மன்ன்ர், அரசு எதுவும் இல்லை. பத்து கட்டளைகள் கூட இன்னமும் பிறக்கவில்லை.
யூதர்களுக்கு அன்று மன்னன் என யாரும் இல்லை. அவர்கள் வாழ்ந்த இஸ்ரேலிய நிலப்பகுதியில் வலுவான அரசுகளும் இல்லை. அதனால் ஆபிரகாம் போன்ற மதரீதியான தலைவர்களுக்கு மக்கள் அன்று கட்டுபட்டிருந்தார்கள், மதமும் குடும்பமும் மட்டுமே அரசின் கடமைகளை பூர்த்தி செய்தன.
ஆபிரகாமுக்கு பின் இஸ்ரேலிய நிலபகுதியில் பஞ்சம்..அதனால் உணவின்றி இஸ்ரேலியர்கள் அன்றைய பாரோக்கள் ஆட்சி செய்த எகிப்துக்கு குடிபெயர்கிறார்கள். அல்லது எகிப்துக்கும், அன்றைய ஐரோப்பாப்வை ஆண்ட ஹிட்டிட் பேரரசுக்கும் இடையே நடந்தபோரில் யூதர்கள் பாரோக்களால் வெற்றிகொள்லபட்டு சிறைபிடிக்கவும் பட்டிருக்கலாம். இஸ்ரேலிய பூமியின் சாபமே இதுதான். அது மிகப்பெரும் பேரரசுகளின் போர்பாதையில் இருப்பது. கிரேக்கத்தில் இருந்து அலெக்சாந்தர் பாபிலோன் மேல் படை எடுத்தால் நடுவே இருப்பது இஸ்ரேல். பாபிலோன் கிரேக்கம் மேல் படை எடுத்தால் அப்போதும் நடுவே இருப்பது இஸ்ரேல். இதனால் இஸ்ரேலியருக்கு சுதந்திரமான தனிநாட்டை அமைப்பது சிக்கலான காரியமாகவே இருந்து வந்துள்ளது.
ஆக எகிப்தில் அடிமைகளாக இஸ்ரேலியர்கள் 400 ஆண்டுகள் வாழ்கிறார்கள்.
பிரமிடுகளை கட்ட அவர்கள் பயன்படுத்தபடுகிறார்கள். காலகட்டம் கிமு 1000 அல்லது அதற்கு பின். இந்த சூழலில் மோசஸ் என்ற தலைவர் இஸ்ரேலியரிடையே தோன்றுகிறார். மன்னனிடன் இஸ்ரேலியரை விடுவிக்க சொல்லிகோருகிறார்.
மன்னன் மறுக்க, மறுக்க நாட்டில் இயற்கை உற்பாதங்கள் நிகழ்கின்றன. இதனால் பயந்த பாரோமன்னன் இஸ்ரேலியரை விடுவிக்கிறான். இந்த நிகழ்வு யூதர்களின் புனித நாளான பாஸோவர் பண்டிகை மூலம் கொண்டாடபடுகிறது.
இப்போது அடிமைதளையில் இருந்து விடுபட்டாலும், அவர்களுக்கு சொந்த நாடு இல்லை. நெகெவ் பாலைவனத்தில் 40 ஆண்டுகள் கிடைப்பதை வைத்து உண்டுவாழ்கிறார்கள். மோசஸ் இந்த சமயத்தில் பத்துகட்டளைகள் மூலம் யூத சமயத்தின் அடிப்படை சித்தாந்தங்களை நிறுவுகிறார்.
இந்த சூழலில் இஸ்ரேலிய பூமியில் பிலிஸ்தினியர்கள் என்ற இன்னொரு இனம் வாழ்ந்து வருகிறது. ஆபிரகாமின் நிலம் தங்களுடையது, கடவுளால் அளிக்கபட்டது என கருதும் இஸ்ரேலியர் ஜோஷுவா தலைமையில் ஜெரிக்கோ நகர் மேல் போர் தொடுத்து அதை வெற்றி காண்கிரார்கள்.
இதன்பின் அடுத்த சில நூற்றான்டுகளில் பிலிஸ்தினியருக்கும், யூதர்களுக்குமிடையே சிறு போர்கள் நிகழ்கின்றன. இப்போதும் யூதர்களின் தனி அரசு அப்பகுதியில் அமையவில்லை. அவர்கள் சிறு, சிறு குடியிருப்புகளாக இஸ்ரேலிய நிலப்பரப்பில் வாழ்ந்து வருகிரார்கள்.
சாம்சன் போன்ற யூத தலைவர்கள் பிலிஸ்தினியர்களை எதிர்த்து போரிடுகிறார்கள். ஆனாலும் முழு வெற்றி இல்லை.

இந்த சூழலில் இஸ்ரேலிய குடிகளை ஒருங்கிணைத்து சாமுவேல் எனும் இறைதூதர் சால் என்பாரை முதல் மன்னராக நியமிக்கிறார். சால் தான் முதல் யூதபேரரசின் அரசர். ஆனால் அன்று அவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை பிலிஸ்தினியர்களுடன் போரிட்டே கழிக்கிரார். சாமுவேலுடன் சில ஆன்மிக விஷயங்களில் அவர் மோத, கடவுளின் ஆதரவை அவர் இழப்பதாக பைபிள் கூறுகிறது. இதன்பின் டேவிட் எனும் ஆட்டிடையன் கோலியாத்தை கவண்கல் மூலம் கொன்று மக்கள் ஆதரவை பெறுகிறார். போர் ஒன்றில் சால் தோற்று தற்கொலை செய்துகொள்ள அடுத்த மன்னனாக டேவிட் ஆட்சியமைக்கிரார்.
டேவிட்டின் வம்சம் பூமி உள்ளளவும் ஆட்சி செய்யும் என கடவுள் வாக்களிக்கிறார்.
ஆனால் டேவிட், அதன்பின் அவரது மகன் சாலமன் ஆகியோர் போர்களில் பெரும்வெற்றி பெற்று யூத சாம்ராஜ்யத்தை உருவாக்கினாலும் தனிவாழ்வில் சில தவறுகளை இழைக்கின்றனர்.
சாலமன் முதலாம் யூத கோயிலை கட்டுகிரார்.
சாலமன் காலத்துக்கு பின் இஸ்ரேல் இரு நாடுகளாக உடைந்து வலுகுன்றுகிறது.
வலுகுன்றிய இஸ்ரேல் மெல் அன்றைய பாபிலோன் சக்ரவர்த்தி நெபுகட்நெசர் படையெடுத்து, இஸ்ரேல் மன்னனை கொன்று, யூதர்களை மறுபடி அடிமைகளாக பிடித்து சென்று பாபிலோனில் அடைக்கிறார்.
யூதர்கள் மீண்டும் நாட்டை இழந்து அடிமைகளாகின்றனர்.
ஆனால் அன்றைய பாரசிக மன்னர் சைரஸ் அவர்கள் மெல் கருணை கொன்டு அவர்களை விடுதலை செய்து, இரண்டாம் முறையாக யூத கோயிலையும் கட்டிகொடுக்கிறார். பைபிளில் அதனால் யூதர் அல்லாத மன்னர் சைரஸ் மிகுந்த சிறப்புடன் பாராட்டபடுகிறார். இவரது காலகட்டம் கிமு 530.
இதன்பின் ஐரோப்பாவில் ஒரு புதிய பேரரசு தோன்றுகிறது.
அதுதான் ரோமானிய பேரரசு. ரோமின் வலுவுக்கு முன் இஸ்ரேலியர்களால் தாக்குபிடிக்க முடியவில்லை. ரோமானிய்ர்களுடன் போரிட்டு தோற்கிறார்கள். ரோம் நியமித்த கவர்னர்கள் இஸ்ரேலை ஆள்கின்றனர்.
இவர்களில் ஒருவனான ஏரோது காலத்தில் தான் ஏசு பிறக்கிறார். காலகட்டம் கிபி 1 முதல் 30 ஆக இருக்கலாம்
டேவிடின் வம்சாவளியினர் இஸ்ரேலை உலகம் அழியும் வரை ஆள்வார்கள் என பைபிளில் இருப்பதால் டேவிடின் வம்சாவளியில் இருந்து ஒரு மீட்பர் தோன்றி ரோமானியரின் ஆதிக்கத்தில் இருந்து இஸ்ரேலை மீட்டு மீண்டும் யூத பேரரசை அமைப்பார் என யூதர்கள் நம்புகிறார்கள். அத்துடன் ரோமானியர்களின் வரிவசூலும் அவர்களிடையெ கடும் அதிருப்தியை அளிக்கிறது. பைபிளில் வரிவசூலிப்பவர்கள் மிக கடுமையாக கண்டிக்கப்ப்டுவதை காணலாம். இந்த சூழலில் ஏசு யூதர்களிடையே செல்வாக்கு பெறுகிறார். பெரும் கூட்டம் கூடுகிறது. இவர் தலைமையில் யூதர்கள் கிளர்ச்சி செய்து தனிநாடு அமைப்பர்கள் என ரோமானியர்கள் அஞ்சுகிறார்கள். அதே சமயம் இவர் தானே மீட்பர் என கூறியதை யூத குருமார்கள் எற்கவில்லை. அவர்களை பொறுத்தவரை மீட்பர் என்பவர் போர் மூலம் ரோமானியர்களை விரட்டி அடித்து நிஜமான பேரரசை ஏற்படுத்துகிறவர். ஏசு ஒன்றும் வாளெடுத்து போர்புரிந்ததாக காணோம். அவர் கூறும் சாம்ராஜ்யமும் பரலோக சாம்ராஜ்யம் என்பதாகவே இருக்கிறது. தவிரவும் ஏசு கடவுளின் மகன் என கூறபட்டதும் குருமார்களுக்கு கடும் இறைநிந்தனையாக பட்டது.
இதனால் யூதாஸால் ஏசு காட்டிகொடுக்கபட்டு சிலுவையில் அறைபடுகிரார். ஏசுவின் கதை அத்துடன் முடிந்தது என நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் ரோமானியர்களும், யூத குருமார்களும்.
ஆனால் ஏசுவின் சீடர்களும், புனித பாலும் ஏசுவின் கொள்கைகளை தொடர்ந்து பரப்புகிரார்கள். யூதர்களை தாண்டி பலநாட்டு மக்களும் அக்கொள்கைகளை ஏற்க அச்சமயம் கிறிஸ்துவ சமயம் என அழைக்கபடுகிறது.
இதன்பின் ரோமானியர்கள் கொடுமை தொடர கிபி 70ல் நீரோ மன்னன் காலத்தில் மிகப்பெரும் யூதர்களின் கிளர்ச்சி நடக்கிறது. நீரோ மன்னன் பெரும்படைகளை அனுப்புகிறான். யூதர்கள் கடுமையாக ஒடுக்கபட்டு இரண்டாம் கோயிலும் இடிபடுகிறது. சுமார் 10 லட்சம் யூதர்கள் கொல்லபட்டதாக கூறபடுகிறது. இந்த மிகப்பெரும் அழிவுக்கு பின் யூதர்கள் பெருமளவில் இஸ்ரேலை விட்டு நகர்ந்து ரோமானிய பேரரசின் பல்வேறு மூலைகளுக்கும் ஓடுகிறார்கள்.
அன்றைய ரோமின் பிடியில் இல்லாத ஸ்பெயினில் ஏராளமாக குடியேறுகிறார்கள்.
அதன்பின் அடுத்த சில நூறாண்டுகளில் கிறிஸ்துவசமயம் ஐரோப்பாவில் வளர்கிறது. யூதர்களின் வரலாறு அதன்பின் அடுத்த 2000 ஆண்டுகளில் ஐரோப்பாவில் சிறுபான்மையினராக வாழ்வதாக அமைகிறது.
(இக்கட்டுரை பண்புடன் குழுமத்திலிருந்து எடுக்கப்பட்டது)
No comments:
Post a Comment